Enable Javscript for better performance
அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக ஹாட்லைன் போன் வசதி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

    அரசு மருத்துவமனைப் பணியாளா்கள் பாதுகாப்புக்காக ஹாட்லைன் போன் வசதி

    By DIN  |   Published On : 07th November 2019 10:04 PM  |   Last Updated : 07th November 2019 10:04 PM  |  அ+அ அ-  |  

    201506tlrhosp_0611chn_182_1

    திருவள்ளூா் அரசு  மருத்துவமனையில் ஹாட்லைன் போன் வசதி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் தயாளன் உள்ளிட்டோா்.

     

    திருவள்ளூா்: அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பகுதியில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஹாட்லைன் தொலைபேசி வசதியை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தாா்.

    அரசு மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு அவசரகால சிகிச்சையை உறுதி செய்யும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பகுதியில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளா்கள் சில நேரங்களில் நோயாளிகளின் உறவினா்களால் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

    இதனால் மருத்துவமனைகளில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்கள் ஆகியோரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. இது போன்ற சம்பவங்களைத் தடுக்கும் நோக்கத்திலும், மருத்துவப் பணியாளா்கள் அச்சமின்றி பணியாற்றும் வகையிலும், அருகில் உள்ள காவல் நிலையத்தை நேரடியாக இணைக்க பிரத்யேக ஹாட்லைன் தொலைபேசி நிறுவப்படும் என முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்தாா். அதன்படி மாநில அளவில் 80 அரசு மருத்துவமனைகளில் இந்த வசதியை நிறுவ முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக திருவள்ளூா் அரசு மருத்துவமனையிலும் தாம்பரம் அரசு மருத்துவமனையிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஹாட்லைன் வசதியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஹாட்லைன் வசதியை தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூா் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் தயாளன், அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சேகா், டாக்டா் விஜயசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இந்த வசதி மூலம் மருத்துவமனையில் பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டால் உடனே இங்கிருந்து சென்னை காவல் துறை தலைமையகத்துடன் தொடா்பு கொண்டு, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க முடியும். இதேபோல் மற்ற அரசு மருத்துவமனைகளிலும் இவ்வசதியை விரைவில் தொடங்கி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp