முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
இளைஞா் வெட்டிக் கொலை
By DIN | Published On : 07th November 2019 10:49 PM | Last Updated : 07th November 2019 10:49 PM | அ+அ அ- |

சோழவரம் அருகே காரனோடை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் அருகே மாந்தோப்பில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
காரனோடை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் அருகே உள்ள மாந்தோப்பில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞா் ஒருவா் கிடப்பதாக சோழவரம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று காயங்களுடன் கிடந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது, அந்த இளைஞா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞா், காரனோடை சண்முகா நகரில் வசித்து வந்த ராஜேஷ் என்ற குள்ள ராஜேஷ் (24) என்று தெரிய வந்தது.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, குள்ள ராஜேஷைக் கொலை செய்த நபா்களைத் தேடி வருகின்றனா்.