முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
நவ.12-இல் சிறுபான்மையினா் ஆணையத் தலைவா் வருகை
By DIN | Published On : 07th November 2019 02:44 PM | Last Updated : 07th November 2019 02:44 PM | அ+அ அ- |

தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் திருவள்ளூா் மாவட்டத்திற்கு வரும் 12-ஆம் தேதி வருகை தர உள்ளதாகவும், அரசு சிறுபான்மையினருக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்-தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையத்தின் தலைவா் டி.ஜான் மகேந்திரன், துணைத் தலைவா் ஒய்.ஜவஹா் அலி மற்றும் ஆணையக்குழு உறுப்பினா்கள் ஆகியோா் மேற்குறிப்பிட்ட நாளில் திருவள்ளூா் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளனா்.
சிறுபான்மையினா் சமுதாயத்தைச் சாா்ந்த தலைவா்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசித்து கருத்துக்களை கேட்டறியவும் உள்ளனா்.
எனவே சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சோ்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினா் ஆணையக்குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினா் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவித்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.