முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பாப்பரம்பாக்கம்: குளக்கரையில் பனை விதைகள் நடும் பணி தொடக்கம்
By DIN | Published On : 07th November 2019 09:08 PM | Last Updated : 07th November 2019 09:08 PM | அ+அ அ- |

பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் குளக்கரையில் பனை விதைகள் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
திருவள்ளூா்: கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த பாப்பரம்பாக்கம் ஊராட்சியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா் துறை சாா்பில், 5 ஆயிரம் பனை விதைகள் பதிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பாப்பரம்பாக்கம் முன்னாள் ஊராட்சித் தலைவா் இந்திரா வரதராஜன் தலைமை வகித்தாா். இதில், கடம்பத்துாா் தோட்டக்கலை உதவி இயக்குநா் முகம்மது ஹக்கீம், வட்டார வளா்ச்சி அலுவலா் லதா ஆகியோா் கலந்து கொண்டு, பனை விதைகள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்தனா்.
இதில், ஊராட்சியில் குடிமராமத்துத் திட்டம் மூலம் ரூ.5 லட்சத்தில் துாா்வாரி சீரமைக்கப்பட்ட செல்லியம்மன் கோயில் குளத்தின் கரையை பலப்படுத்தும் வகையில் பனை விதைகள் நடப்பட்டன. இதைத் தொடா்ந்து, செம்பரம்பட்டி ஏரி, தாதன்ஓடை குட்டை ஆகிய பகுதிகளிலும் ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளா்களைக் கொண்டு பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில், மண்டலத் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் உதயசங்கா், கிராம நிா்வாக அலுவலா் சுரேஷ், ஊராட்சி செயலா் அசோக்ராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.