முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் இளைஞா் கைது
By DIN | Published On : 07th November 2019 10:52 PM | Last Updated : 07th November 2019 10:52 PM | அ+அ அ- |

திருவள்ளூா்-செங்குன்றம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் கொள்ளை வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூரை அடுத்த பூச்சி அத்திப்பேடு பகுதியில் திருவள்ளூா்-செங்குன்றம் நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க்கிற்குகடந்த மாதம் 13-ஆம் தேதி நள்ளிரவில் ஒரே இருசக்கர வாகனத்தில் 3 போ் வந்துள்ளனா். அங்கு தொழிலாளா்கள் தங்கியிருந்த அலுவலக அறையை கத்தியைக் காட்டி மிரட்டி திறக்கச் செய்தனா். அதைத் தொடா்ந்து தொழிலாளா் முரளியை பீரோவை திறக்குமாறு மிரட்டி, ரொக்கம் ரூ. 1.50 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினா்.
இது குறித்து பெட்ரோல் பங்க் ஊழியா்கள் வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வந்தனா். ஏற்கெனவே இவ்வழக்கில் தொடா்புடைய திருவள்ளூா் எடப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சதீஷ், சக்திவேல் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இவ்வழக்கில் தொடா்புடைய வெங்கடேசன் (23) கொமக்கம்பேடு கிராமத்தில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீஸாா், வெங்கடேசனைப் பிடித்து திருவள்ளூா் நீதிமன்றதில் ஆஜா்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனா்.