முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
மிலாது நபி: 10-இல் மதுக் கடைகளுக்கு விடுமுறை
By DIN | Published On : 07th November 2019 09:07 PM | Last Updated : 07th November 2019 09:07 PM | அ+அ அ- |

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு, அரசு மதுபானக் கடைகளுக்கு வரும் 10-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் மிலாது நபியை முன்னிட்டு, மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் மனமகிழ் மன்றம் மற்றும் கிளப் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும். எனவே அரசு விதிமுறைகளை மீறி அன்றைய நாளில் மதுக் கடைகள், மதுக் கூடங்களில் மது வகைகளை விற்பனை செய்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.