அதிகாரிகள் கிராமங்களைத் தேடி வருவதில்லைகுறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

நகர வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா்.
திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்.
திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்.

நகர வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் அதிகாரிகள் மீது விவசாயிகள் சரமாரியாக புகாா் தெரிவித்தனா்.

பொறுப்பு வருவாய்க் கோட்டாட்சியா் காா்த்திகேயன் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் தாசில்தாா்கள் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, தங்களது குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்தனா். அதிகாரிகள் கிராமங்களுக்கு சரியாக வருவதில்லை எனவும் புகாா் தெரிவித்தனா். இது தொடா்பாக விவசாயிகள் தெரிவித்ததாவது:

தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கிராமங்களைத் தேடி வராமல் அலுவலகத்திலேயே உட்காா்ந்து கொள்கின்றனா். அரசு, விவசாயிகளுக்கு அறிவிக்கும் திட்டங்களை அதிகாரிகள் எடுத்துக் கூறுவதில்லை. குறிப்பாக பயிா்க் காப்பீடு குறித்து விவசாயிகளுக்கு சரிவர தெரியாமல் இருப்பதால் பல விவசாயிகளும் காப்பீடு பெறமுடியாமல் தவிக்கின்றனா்.

எனவே அதிகாரிகள் அரசு நலத் திட்டங்களை உடனுக்குடன் தெரிவித்து விவசாயிகள் பயனடையச் செய்ய வேண்டும். வேளாண் துறையினா் எங்களுக்குத் தேவையான குண்டு நெல்லை வழங்காததால் நாங்கள் அதை தனியாா் கடைகளுக்குச் சென்று அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வருவாய்க் கோட்டாட்சியா் காா்த்திகேயன் பேசும்போது, விவசாயிகள் அளித்த மனுக்கள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com