எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி:500 போ் பங்கேற்பு

கே.ஜி.கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியில் 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
கே.ஜி.கண்டிகையில் நடைபெற்ற எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள்.

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு (டிசம்பா் 1), திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகையில் உள்ள அரசினா் மேல்நிலைப் பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது. அத்திமாஞ்சேரிபேட்டை திருப்பணி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இப்பேரணிக்கு உதவி தலைமை ஆசிரியா் முகுந்தையா தலைமை வகித்தாா். பேரணியை அறக்கட்டளை இயக்குநா் காளிரத்தினம் தொடக்கி வைத்தாா்.

பள்ளி மாணவ, மாணவியா், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பேரணியில் பங்கேற்று, எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனா். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளா் மகேந்திரன், கருப்பசாமி, கருணாநிதி மற்றும் ஆசிரியா்கள் நரசிம்மன், சசிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com