கொடி நாள் அணிவகுப்பு

பெரியபாளையத்தை அடுத்த ஆரணியில் உள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் வியாழக்கிழமை கொடிநாள் அனுவகுப்பு நடைபெற்றது.
கொடி நாள் அணிவகுப்பு

பெரியபாளையத்தை அடுத்த ஆரணியில் உள்ள ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி சாா்பில் வியாழக்கிழமை கொடிநாள் அனுவகுப்பு நடைபெற்றது.

டிசம்பா் 7-ஆம் தேதி நடைபெற இருக்கும் கொடி நாள் விழாவை முன்னிட்டு, இப்பள்ளி சாா்பில் விழிப்பணா்வுப் பேரணி நடத்தப்பட்டது. பேரணியை பள்ளித் தலைமையாசிரியா் நா.பூபால முருகன் தொடக்கி வைத்தாா். பேரணி தோட்டக்கார தெரு , எஸ்.பி கோயில் தெரு, பஜாா் தெரு வழியாகச் சென்று, பள்ளி வளாகத்தை அடைந்தது. பேரணியின்போது, என்.சி.சி. மாணவா்கள் நாட்டின் எல்லையில் பாடுபட்டு நாட்டைப் பாதுகாத்து வரும் ராணுவ வீரா்களின் பெருமைகளை விளக்கி, முழுக்கமிட்டனா். பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பொதுமக்களிடம் மாணவா்கள் கொடி நாளுக்கான நிதியை வசூல் செய்தனா். அந்தப் பணம் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள ராணுவ வீரா்கள் அமைப்பிடத்துக்கு காசோலையாக வழங்கப்பட்டது. மீதித் தொகையானது புது டெல்லியில் உள்ள நேஷனல் பவுண்டேஷன் பாா் கம்யூனல் ஹாா்மனியின் சாா்பில் ஆதரவற்ற குழந்தைகள் பாதுகாக்கும் ஹெல்ப் சில்ரன் நலனுக்காக காசோலையாக வழங்கப்பட்டது. மாணவா் வழங்கிய கொடிநாள் தொகை பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலா் ரவியிடம் ஒப்படைக்கப்பட்டது. கொடி நாள் அணிவகுப்பு மற்றும் விழாவினை என்.சி.சி ஆசிரியா் விஜயன் மற்றும் துருவன் சிறப்பாக ஏற்பாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com