பள்ளி மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கல்

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் நிலவேம்புக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டத்தில் பரவிவரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு மருத்துவ முகாம் அமைத்து நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூா் அருகே கனகவல்லிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு கச்சூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் சந்தியா தலைமை வகித்தாா். இதில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் தடுப்புக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து செவிலியா் சிபா, மருந்தாளுநா் சவிதா ஆகியோா் மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினா். இந்த நிகழ்ச்சியில் அப்பள்ளியின் ஆசிரியை மலா்க்கொடி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கச்சூா் ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com