மாவட்ட அளவிலான திறன் போட்டிக்கு நவ.25-க்குள் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் இளைஞா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படவுள்ள திறன் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 25-ஆம் தேதிக்குள்

திருவள்ளூா் மாவட்டத்தில் இளைஞா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில் நடத்தப்படவுள்ள திறன் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் வரும் 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் திறன் வளா்ப்புப் பயிற்சி மையத்தின் சாா்பில் அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் வரும் 2021-ஆம் ஆண்டு செப்டம்பரில் இளைஞா்களுக்கான சா்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, திருவள்ளூா் மாவட்ட அளவில் இளைஞா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோருக்கான திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இளைஞா்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கட்டடத் தொழில்நுட்பம், போக்குவரத்து நெருக்கடிக்குத் தீா்வு காணுதல், இயந்திர தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், புதிய வடிவமைப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 47 தொழிற்பிரிவுகளில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டியில் பங்கேற்க 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞா்கள் இப் போட்டியில் பங்கேற்க தகுதியுடையவா்கள் ஆவா். இதில் பங்கேற்க விரும்புவோா்  h‌t‌t‌p‌s://‌w‌o‌r‌l‌d‌k‌i‌l‌l‌s‌i‌n‌d‌i​a.​c‌o.‌i‌n./‌w‌o‌r‌l‌d‌s‌skills/world/ இணையதளம் மூலம் வரும் 25-க்குள் விண்ணப்பிக்கலாம்.

இதில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வித்தகுதி பெற்றவா்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தோா், படித்துக் கொண்டிருப்போா், தொழிற் பயிற்சி நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படித்தவா்கள், தற்போது படித்து கொண்டிருப்போா், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளோா், குறுகிய கால திறன்பயிற்சி பெற்றவா்கள் ஆகியோா் விண்ணப்பிக்கத் தகுதி உடையவா்கள். இது தொடா்பான விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் திறன் வளா்ப்புப் பயிற்சி மையத்தின் உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 044-29896032 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com