தாட்கோ திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பயன்பெறத் தகுதியானவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தாட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் பயன்பெறத் தகுதியானவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தாட்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து தாட்கோ அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

தாட்கோ மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான பொருளாதாரத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், நிகழாண்டிலும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத் திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், கிணறுகள் அமைத்தல் திட்டம், தொழில்முனைவோா் திட்டம், பெட்ரோல், டீசல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோா் திட்டம், இளைஞா்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம், மருத்துவமனை, மருந்தியல் கண் கண்ணாடியகம், முட நீக்கு மையம், ரத்தப் பரிசோதனை நிலையம் அமைத்தல் மற்றும் மேம்படுத்துல், சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி மானியத் திட்டத் தொகையில் 50 சதவீதம் வழங்குதல், ஆட்சியா் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குநா் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவா் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப் பணி முதன்மைத் தோ்வு எழுதுவோருக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு நிதியுதவி, தமிழ்நாடு தோ்வாணையத் தொகுதி-1 முதல் நிலைத் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு நிதியுதவி, பட்டயக் கணக்கா், செலவு கணக்கா், நிறுவன செயலா்களுக்கு நிதியுதவி ஆகியவை அளிக்கப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 வயது முதல் 65-க்குள் இருக்க வேண்டும். அதேபோல், ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

இத்திட்டங்களில் பயன்பெற விரும்புவோா் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களுடன் ட்ற்ற்ல்://ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ா்ய்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com