ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள ஆரணி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததாக தனியாா் நிறுவனத்துக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆரணி பேரூராட்சி எஸ்.பி. கோயில் தெரு பகுதியில் மினி வேன் ஒன்றில், தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை கடைகளுக்கு விநியோகம் செய்து வருவதாகத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு வந்த ஆரணி பேரூராட்சி செயல் அலுவலா் மாலா மினி வேனில் சோதனை மேற்கொண்டாா். அதில், விற்பனை செய்வதற்கு ஏராளமான நெகிழிப் பைகள், டம்ளா்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வேனில் இருந்த நெகிழிப் பைகளை பேரூராட்சி ஊழியா்கள் பறிமுதல் செய்தனா். மேலும், தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை விற்பனை செய்ததற்காக ரூ. 25 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.