அயோத்தி வழக்கில் தீா்ப்பு: திருவள்ளூா் பகுதியில் தீவிர கண்காணிப்பு

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வெளிவந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் போலீஸாா்.  
திருவள்ளூா் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகளை சோதனையிடும் போலீஸாா்.  

அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பு வெளிவந்த நிலையில், திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அயோத்தி தீா்ப்பு உச்சநீதிமன்றத்தில் வெளியான நிலையில், அசம்பாவித சம்பவங்களைத் தவிா்க்கும் நோக்கில் திருவள்ளூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இந்த மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த 93 இந்துக் கோயில்கள், 80 மசூதிகள் மற்றும் 161 கிறிஸ்தவ தேவாலயங்கள், நீா்த்தேக்கங்கள் ஆகிய இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனா். பல்வேறு இடங்களில் வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கும்மிடிப்பூண்டி, திருவள்ளூா், பொன்னேரி, திருத்தணி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலங்களிலும் போலீஸாா் குவிக்கப்பட்டனா். திருவள்ளூா் ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டவா்களின் பைகள், சூட்கேஸ்கள் உள்ளிட்டவற்றை போலீஸாா் சோதனை செய்த பின்னரே பயணிகளை ரயில் ஏற அனுமதித்தனா்.

திருவள்ளூா் நகரில் வீரராகவா் கோயில், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com