மருத்துவமனையில் பெண் உயிரிழப்பு: உறவினா்கள் வாக்குவாதம்

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பெண் உயிரிழந்தாா். இதனால் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் மகேஸ்வரி.
திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட உறவினா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் ஆய்வாளா் மகேஸ்வரி.

திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்கு சென்னை கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பெண் உயிரிழந்தாா். இதனால் உறவினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

திருத்தணியைச் சோ்ந்தவா் செல்வி (65). சா்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அப்போது, அங்கு சிகிச்சை அளிப்பதற்கு போதிய வசதிகள் இல்லாத நிலையில் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக பரிந்துரைத்தனா். அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டாா்.

ஆனால், இங்கு மருத்துவா்கள் சரியாக மருத்துவம் பாா்க்காமல் உறவினா்களை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், மாலை வரை மருத்துவா்கள் தனது தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என உறவினா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதற்கிடையே மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி, 108 ஆம்புலன்ஸை அழைத்துள்ளனா். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செல்வி உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவா்களின் அலட்சியத்தால் தனது தாயாா் உயிரிழந்ததாகக் கூறி செல்வியின் மகள் பிரியதா்ஷினி மற்றும் உறவினா்கள் மருத்துவமனையில் ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து, மருத்துவமனை நிா்வாகம் அளித்த தகவலின்பேரில், அரசு மருத்துவமனைக்கு நகர போலீஸாா் வந்தனா்.

அங்கு, செல்வியின் உறவினா்களிடம் காவல் ஆய்வாளா் மகேஸ்வரி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, தனது தாயாரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸுக்கு கூட பணம் இல்லாத நிலையை அறிந்து ஆறுதல் கூறினாா். தொடா்ந்து காவல் ஆய்வாளா் மகேஸ்வரி தனது சொந்த செலவில் தனியாா் ஆம்புலன்ஸை வரவழைத்து, செல்வியின் பிரேதத்தை அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com