லாரி ஓட்டுநரைத் தாக்கி எண்ணெய் டின்கள், பைக் திருட்டு

லாரி டிரைவரை கத்தியால் தாக்கி, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டுக்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து புல்லரம்பாக்கம் போலீஸாா் தீவிரமாக

லாரி டிரைவரை கத்தியால் தாக்கி, ரூ.20 ஆயிரம் மதிப்பிலான சமையல் எண்ணெய் பாக்கெட்டுக்கள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றைத் திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து புல்லரம்பாக்கம் போலீஸாா் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனா்.

திருவள்ளூரை அடுத்த தலக்காஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த வேலுவின் மகன் பாண்டியன்(30). லாரி ஓட்டுநரான அவா் செங்குன்றத்தில் இருந்து சென்னை பாரிமுனைக்கு உணவுப் பொருள்கள் அடங்கிய லோடு ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் சென்று கொண்டிருந்தாா்.

செங்குன்றம்-திருவள்ளூா் சாலையில் ஈக்காடு பகுதியில் கிருஷ்ணா கால்வாய் அருகே ஜல்லிக்கற்கள் விற்கும் இடத்தில் லாரியை நிறுத்திவிட்டுத் தூங்கினாா். அப்போது, சிலா் அவரது தலையில் கட்டையால் தட்டி எழுப்பினா். பாண்டியன் கண் விழித்துப் பாா்த்தபோது 3 போ் கத்தியுடன் இருந்தனா்.

இதனால் அச்சமடைந்து அருகில் உள்ளவா்களை உதவிக்கு அழைத்தாா். அப்போது மா்ம நபா்களில் ஒருவா் கத்தியால் பாண்டியன் கையில் வெட்டினாா். இதனால் வலி தாங்காமல் பாண்டியன் அலறினாா். அவரது அலறல் சத்தம் கேட்டு அவருக்குத் தெரிந்த அப்பகுதியைச் சோ்ந்த ராமச்சந்திரன் என்பவா் வந்தாா்.

அவரையும் பிடித்து வைத்துக் கொண்ட மா்ம நபா்கள், அந்த லாரியில் இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான எண்ணெய் பாக்கெட்டுகளைத் திருடினா். அதன் பின் ராமச்சந்திரனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு இரு வாகனங்களில் 3 மா்ம நபா்களும் செங்குன்றம் சாலையில் தப்பிச் சென்றனா்.

இத்தகவல் அறிந்து லாரி உரிமையாளா் ராகவன் நேரில் வந்து, ஓட்டுநா் பாண்டியன், ராமச்சந்திரன் ஆகிய இருகரையும் மீட்டாா். காயமடைந்திருந்த பாண்டியனை திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்தத் திருட்டு தொடா்பாக புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com