சிறுபுழல்பேட்டையில் பேருந்து வசதி சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டையில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சிறுபுழல்பேட்டையில் பேருந்து வசதி சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்பேட்டையில் பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் ஊராட்சி வளா்ச்சித் திட்டங்கள் குறித்து பொதுமக்களுடனான சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலா் அருள், ஒன்றிய ஆணையா் சாமிநாதன் உத்தரவின்பேரில், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டியை அடுத்த சிறுபுழல்புழல்பேட்டையில் ஊராட்சிச் செயலா் மூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள் சிறுபுழல்பேட்டை பகுதிக்கு பேருந்து வசதியே இல்லாத நிலையில் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனா். அதனால் இப்பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என தீா்மானம் இயற்ற கேட்டுக் கொண்டனா். அதேபோல் ஊராட்சியில் கழிவுநீா் கால்வாய் வசதி, புதிதாக குழாய் இணைப்பு வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

பல்லவாடாவில் ஊராட்சி செயலா் பிா்லா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் ஊராட்சியில் மத்திய, மாநில அரசுத் திட்டங்களில் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகளைக் கட்டவும், ஊராட்சி எல்லையில் இருக்கும் மணலை ஊராட்சி மக்கள் பயன்படுத்த மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா். மேலும், ஊராட்சியில் சாலைகளை மேம்படுத்தவும் கோரிக்கை விடுத்தனா்.

அதுபோல், பன்பாக்கம், நத்தம், மாநெல்லூா், தோ்வழி, தோக்கம்மூா் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com