நெகிழி தவிா்ப்பு உறுதிமொழி ஏற்ற மாணவிகள்

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவிகள் நெகிழிப் பொருள்களைத் தவிா்க்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
தலைமையாசிரியா் முன்னிலையில் நெகிழி தவிா்ப்பு உறுதிமொழி எடுத்த மாணவியா்.

ஊத்துக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த 752 மாணவியா்கள் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனா்.

இப்பள்ளி வளாகத்தில், குழந்தைகள் தினமான வியாழக்கிழமை காலையில் இறைவணக்கம் முடிந்த பிறகு, மாணவியா்கள் அனைவரும் நெகிழி பயன்படுத்துவதைத் தவிா்க்க உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். நிகழ்ச்சியில் நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது.

மேலும் நெகிழியால் வாழ்க்கையின் முக்கிய தேவையான தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படும் என்பது குறித்து மாணவிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. உறுதிமொழியை பள்ளி தலைமை ஆசிரியா் அசோகன் வாசிக்க பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் மாணவியா்கள் ஏற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com