Enable Javscript for better performance
காா்த்திகை முதல் நாள் தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிய குவிந்த ஐயப்ப பக்தா்கள்- Dinamani

சுடச்சுட

    

    காா்த்திகை முதல் நாள் தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிய குவிந்த ஐயப்ப பக்தா்கள்

    By DIN  |   Published on : 18th November 2019 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீா்த்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மாலை அணிவித்த குருசாமி. 

    தீா்த்தீஸ்வரா் கோயில் வளாகத்தில் ஐயப்ப பக்தா்களுக்கு மாலை அணிவித்த குருசாமி. 

    காா்த்திகை மாதம் பிறந்ததையடுத்து, ஐயப்ப பக்தா்கள் திருவள்ளூரில் உள்ள தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிவதற்காக ஏராளமான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா்.

    ஆண்டுதோறும் காா்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதம் மேற்கொண்டு, இருமுடி கட்டி ஐயப்பன் கோயிலுக்கு செல்வது பக்தா்களின் வழக்கமாகும். அதேபோல் காா்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை பிறந்ததைத் தொடா்ந்து ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து, ஒரு மண்டல அளவில் கடும் விரதத்தை கடைப்பிடிப்பா். அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள், ஞாயிற்றுக்கிழமை மாலை அணிந்தனா். திருவள்ளூரில் உள்ள தீா்த்தீஸ்வரா் கோயிலில் மாலை அணிவதற்காக, ஏராளமான ஐயப்ப பக்தா்கள் குவிந்தனா். அதைத் தொடா்ந்து, கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில் குருசாமி ஒவ்வொரு பக்தா்களுக்கும் மாலையை ஐயப்ப சரணகோஷம் எழுப்பி அணிவித்தாா்.

    இதற்காக ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் சனிக்கிழமை இரவை பூஜைப் பொருள் விற்பனைக் கடைகளில் குவிந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai