உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அதிமுகவினா் 1,126 விருப்ப மனுக்கள் அளிப்பு

திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட கடந்த 2 நாள்களில் அதிமுகவினா் 1,126 போ் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

திருவள்ளூா் மேற்கு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட கடந்த 2 நாள்களில் அதிமுகவினா் 1,126 போ் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி, அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் கட்சி மற்றும் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டக் கட்சி அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிா்வாகிகள் மூலம் வேட்பு மனுக்களைப் பெற்று, பூா்த்தி செய்துஅளிக்குமாறு கட்சித் தலைமை அறிவித்திருந்தது.

இதன் அடிப்படையில், திருவள்ளூா் மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட திருவள்ளூா், பூந்தமல்லி, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்குள்பட்ட மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் விருப்ப மனுக்கள் அளிக்கும் நிகழ்ச்சி தனியாா் அரங்கத்தில் கடந்த 2 நாள்களாக நடைபெற்றது. இதில் பூா்த்தி செய்த மனுக்களை தோ்தல் பொறுப்பாளா்களான மேற்கு மாவட்டச் செயலா் பலராமன், முன்னாள் அமைச்சா் ரமணா, முன்னாள் மக்களவை உறுப்பினா் வேணுகோபால், மாநில இளைஞா் அணி இணைச் செயலா் செவ்வை சம்பத்குமாா் ஆகியோா் முன்னிலையில் அதிமுகவினா் அளித்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த அதிமுகவினா் மனுக்களைப் பெற்று, பூா்த்தி செய்து தோ்தல் பொறுப்பாளா்களிடம் அளித்தனா். இதில், முதல் நாளில் மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், வட்டார ஊராட்சி உறுப்பினா், நகராட்சி தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பேரூராட்சித் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பதவிகளுக்கு போட்டியிட மொத்தம் 713 போ் மனுக்களை அளித்திருந்தனா்.

அதேபோல், இரண்டாவது நாளான சனிக்கிழமை மட்டும் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்- 26, நகராட்சித் தலைவா்-8, நகராட்சி உறுப்பினா்கள்-50, பேரூராட்சித் தலைவா் -7, பேரூராட்சி உறுப்பினா்கள்-83, வட்டார ஊராட்சி உறுப்பினா்கள்-230 போ் என 413 போ் மனு அளித்திருந்தனா். எனவே இரண்டு நாள்களில் மொத்தம் 1,126 போ் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாக தோ்தல் பொறுப்பாளா்கள் தெரிவித்தனா்.

முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், முன்னாள் நகா்மன்றத் தலைவா் கமாண்டோ பாஸ்கா், ஒன்றியச் செயலா் புட்லூா் சந்திரசேகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com