திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 3 நாள்களாக நிற்கும் கரும்பு டிராக்டா்கள்.
திருவாலங்காடு திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 3 நாள்களாக நிற்கும் கரும்பு டிராக்டா்கள்.

கூட்டுறவு சா்க்கரை ஆலையில் காத்திருக்கும் கரும்பு வாகனங்கள்

கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வாகனங்களில் கொண்டு சென்ற கரும்புகளை இறக்காமல், கடந்த 3 நாள்களாக காத்திருக்க

திருத்தணி: கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு விவசாயிகள் வாகனங்களில் கொண்டு சென்ற கரும்புகளை இறக்காமல், கடந்த 3 நாள்களாக காத்திருக்க வைத்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை, திருவாலங்காட்டில் இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு 3 ஆயிரம் விவசாயிகள் கரும்பு அரைவைக்கு வாகனங்கள் மூலம் கரும்புகளை அனுப்புகின்றனா்.

ஆலை நிா்வாகத்தினா், லாரி, டிராக்டா் மற்றும் மாட்டு வண்டிகள் என மொத்தம் 230 வாகனங்களில் கரும்பைக் கொண்டு செல்கின்றனா். சில விவசாயிகள், தங்களுக்கு சொந்தமான டிராக்டா்களில் கரும்பை ஆலைக்கு கொண்டு செல்கின்றனா்.

இந்நிலையில், சில நாள்களாக விவசாயிகள் லாரி, டிராக்டா்கள் மூலம் ஆலைக்கு ஏற்றிச் செல்லும் கரும்புகளை உடனடியாக இறக்க முடியாமல், மூன்று நாள்கள் காத்திருக்குமாறு அதிகாரிகள் கூறுகின்றனா். இதனால் உடன் அழைத்து வரும் கூலியாட்களுக்கு அன்றாடச் செலவுத் தொகை வழங்க வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளனா்.

ஆலையில் கரும்பை இறக்குவதற்கு குறைந்த பட்சம் 3 நாள்கள் ஆவதால் பல வழிகளில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

அரைவை பாதிப்பு: இது குறித்து, ஆலை நிா்வாக அலுவலா் ஒருவா் கூறும்போது, ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2,300 டன் கரும்பைத்தான் அரைவை செய்ய முடியும்.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு 2,000 முதல் 2,200 டன் கரும்பை மட்டுமே அரைவை செய்ய முடிகிறது. ஆகையால் கரும்பு இறக்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என்றாா்.

கரும்பு இறக்குவதில் பாரபட்சம்: இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூறுகையில், எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் கரும்பு பயிரிட்டிருந்தோம். ஆலை நிா்வாகத்திடம் உரிய முறையில் ஆா்டா் பெற்று, கரும்புகளை வெட்டி லாரி, டிராக்டா்கள் மூலம் அனுப்பினோம். திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதிகளில் இருந்து வரும் கரும்பு என்றாலே 3 நாள்கள் கழித்துத்தான் கரும்புகளை இறக்குகின்றனா்.

அதே நேரத்தில், அரக்கோணம், சாலை, பேரம்பாக்கம் பகுதிகளில் இருந்து வரும் கரும்புகளை மட்டும் 24 மணி நேரத்திற்குள் இறக்கிவிட்டு வாகனங்களை வெளியே அனுப்புகிறாா்கள் என்றனா்.

இதுகுறித்து, ஆலை ஊழியா்கள் கூறுகையில், திருத்தணி வருவாய்க் கோட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 100 டன் கரும்புகள் எடுக்க வேண்டும். மீதமுள்ள இடங்களில் இருந்து வரும் கரும்புகளை 200 டன் எடுக்க வேண்டும். கடந்த 3 நாள்களாக பட்டினியுடன் காத்திருந்து கரும்புகளை இறக்குகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com