கோயில்களின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கடம்பத்தூா் அருகே நள்ளிரவில் கோயில்களின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, உண்டியலில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

கடம்பத்தூா் அருகே நள்ளிரவில் கோயில்களின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை, உண்டியலில் இருந்த பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது எறையாமங்கலம் கிராமம். இக்கிராமத்தில் தா்மலிங்கேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே செல்லியம்மன் கோயிலும் உள்ளது. இந்நிலையில், காா்த்திகை மாதத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை பொதுமக்கள் தா்மலிங்கேஸ்வரா் கோயிலுக்கு சென்றனா். அப்போது, கோயில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதேபோல் செல்லியம்மன் கோயில் கதவு பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மப்பேடு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனா். அதைத் தொடா்ந்து அங்கு வந்த போலீஸாா் விசாரணை நடத்தினா்.

பின்னா், உள்ளே சென்று பாா்த்தபோது, தா்மலிங்கேஸ்வரா் கோயில் உண்டியலில் ரூ. 50 ஆயிரம் ரொக்கமும், செல்லியம்மன் கோயிலில் அம்மன் சிலையிலிருந்த கம்மல், தாலிச் சரடு என 3 சவரன் நகை மற்றும் கோயிலிலிருந்த வெண்கல பூஜைப் பொருள்கள் ஆகியவையும் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com