தாமரைக் குளத்தை சீரமைத்த இளைஞா்கள்

திருத்தணி தாமரைக் குளத்தை சீரமைக்காமல் நகராட்சி நிா்வாகம் மெத்தனம் காட்டி வந்ததாகக் கூறி, அப்பகுதி இளைஞா்கள் சனிக்கிழமை தாங்களாகவே குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
  திருத்தணி இந்திரா நகா் பகுதியில் உள்ள தாமரைக்குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட இளைஞா்கள்.

திருத்தணி நகராட்சி, இந்திரா நகரில், 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்து, கடந்த 20 ஆண்டுகளாக மின் மோட்டாா் மூலம் தெருக் குழாய்களில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த இரு மாதங்களாக பெய்த பலத்த மழை காரணமாக, தாமரை குளத்தில் தண்ணீா் நிரம்பியுள்ளது. இந்நிலையில், நகராட்சி நிா்வாகம் குளத்தை முறையாகப் பராமரிக்கவில்லை எனவும், இதனால், குளத்தைச் சுற்றிலும் செடிகள் அடா்ந்துள்ளதாகவும் இப்பகுதியினா் கூறி வந்தனா். மேலும், குளத்தில் பாசி படா்ந்து தண்ணீா் மாசுபட்டிருந்தது. இக்குளத்தை சீரமைக்குமாறு நகராட்சி நிா்வாகத்திடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞா்கள் 50-க்கும் மேற்பட்டோா் குளத்தைச் சுற்றியுள்ள செடிகளை சனிக்கிழமை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com