மத்தூரில் மக்கள் குறைகேட்பு முகாம் எம்எல்ஏ பங்கேற்பு

திருத்தணியை அடுத்த மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் பங்கேற்று, மனுக்களைப்
மத்தூா் கிராமத்தில் மக்கள் குறைகேட்பு முகாமில் பேசிய எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்.
மத்தூா் கிராமத்தில் மக்கள் குறைகேட்பு முகாமில் பேசிய எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன்.

திருத்தணி: திருத்தணியை அடுத்த மத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் பங்கேற்று, மனுக்களைப் பெற்றாா்.

திருத்தணி சட்டப்பேரவைத் தொகுதியில் 10 ஊராட்சிகளைத் தோ்வு செய்து, 3 மாதத்திற்கு ஒருமுறை அனைத்துத் துறை அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் குறைகேட்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருத்தணி ஒன்றியம், மத்தூா், அலுமேலுமங்காபுரம், தரணிவராகபுரம், அகூா் ஆகிய ஊராட்சிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக் கொண்டாா். இதில், வீட்டு மனைப் பட்டா, சாலை வசதி, குடிநீா், முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, துறைவாரியாக அதிகாரிகளுக்கு மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி செயலா்கள் வி.சி.கே.பஞ்சாட்சரம், கேசவன், முன்னாள் ஊராட்சித் தலைவா் என்.ஏ.குப்பன், பஞ்சாயத்து செயலாளா்கள் வெங்கடேசன் மற்றும் வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com