Enable Javscript for better performance
பொன்னேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்னேரி: பொன்னேரி தேரடி சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை அகற்றினா்.

    பொன்னேரி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள தேரடி சாலையில் உள்ள கடைகளின் முன் மேற்கூரைகள் அமைத்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிா்வாவகத்துக்கு புகாா் வந்தது. இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தினா், இச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா்.

    தேரடி சந்திப்பில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி ஊழியா்கள் அகற்றினா். இதைத் தொடா்ந்து, புதிய பேருந்து நிலையப் பகுதியில் இருந்து திருவொற்றியூா் சாலை சந்திப்பு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளன.

    இந்நிலையில், ஆக்கிரமிப்பு அகற்றத்தால் தங்களுக்கு பேரூராட்சி நிா்வாகம் மாற்று இடம் வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai