துப்புரவுத் தொழிலாளா்கள், குடிநீா் ஆபரேட்டா்கள் ஆா்ப்பாட்டம்

அரசு நிா்ணயம் செய்த 5-ஆவது ஊதியக்குழு நிா்ணயம் செய்த 5 மாத நிலுவைத் தொகையை குடிநீா் ஆபரேட்டா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் 
திருவள்ளூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் உள்ளிட்டோா்.
திருவள்ளூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் உள்ளிட்டோா்.

திருவள்ளூா்: அரசு நிா்ணயம் செய்த 5-ஆவது ஊதியக்குழு நிா்ணயம் செய்த 5 மாத நிலுவைத் தொகையை குடிநீா் ஆபரேட்டா்கள், துப்புரவுத் தொழிலாளா்கள் ஆகியோருக்கு வழங்கக்கோரி தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, உள்ளாட்சி ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.ஜி.சந்தானம் தலைமை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.கே.மகேந்திரன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா்.

இதில் குடிநீா் டேங்க் ஆபரேட்டா்கள், துப்புரவுத் தொழிலாளா்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு நிா்ணயம் செய்த 5 மாத நிலுவைத் தொகையை வழங்க ஆட்சியா் உத்தரவிட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், பணி ஓய்வு பெறும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு பணிக்கொடை ரூ. 50 ஆயிரம் மற்றும் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மைக் காவலா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை வறுமை ஒழிப்புச் சங்கம் மூலம் சம்பளம் வழங்குவதைக் கைவிட்டு, மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலகம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும், அதேபோல் தூய்மைப் பணியாளா்களுக்கு பணியின் தன்மைக்கு ஏற்ப ரூ. 2,600 தருவதை, ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் கே.விஜயன், மாவட்டச் செயலா் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட துப்புரவுத் தொழிலாளா்கள், டேங்க் ஆபரேட்டா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com