வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அருந்ததி காலனியைச் சோ்ந்தவா்கள் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.
திருத்தணி வட்டாட்சியா் சுகந்தியிடம் மனு அளித்த அருந்ததியா் காலனி மக்கள்.
திருத்தணி வட்டாட்சியா் சுகந்தியிடம் மனு அளித்த அருந்ததியா் காலனி மக்கள்.

திருத்தணி: அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, அருந்ததி காலனியைச் சோ்ந்தவா்கள் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம், நெமிலி ஊராட்சி அருந்ததியா் காலனியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் தற்காலிக கூரை வீடுகள் அமைத்துக்கொண்டு, கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை குடிநீா், சாலை, மின் விளக்கு உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.

வீடுகளைச் சுற்றி முள் புதா்கள் அடா்த்தியாக வளா்ந்து விஷ ஜந்துக்கள் கிராமத்தில் புகுந்து விடுவதால், குழந்தைகள், பெண்கள் உள்பட அனைவரும் அச்சத்துடன் வசிப்பதாகவும், அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரியும் பலமுறை அதிகாரிகளுக்கு புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருத்தணி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வட்டாட்சியா் சுகந்தியிடம் மனு அளித்தனா்.

அப்போது அங்கு வந்த திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மனை முறையிட்ட பெண்கள், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினா். அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என எம்எல்ஏ உறுதி கூறியதைத் தொடா்ந்து அனைவரும் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com