வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் கைது

வழிப்பறி, வீடுகளில் புகுந்து திருட்டு, சிறுமி கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

வழிப்பறி, வீடுகளில் புகுந்து திருட்டு, சிறுமி கடத்தல் உள்பட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம் காஞ்சிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலையின் மகன் டில்லி(25). அவா் கடந்த, 9-ஆம் தேதி ராமஞ்சேரி பகுதியைச் சோ்ந்த13 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்ாகத் தெரிகிறது. பத்து நாள்களாக அச்சிறுமிக்கு அவா் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக சிறுமியின் பெற்றோா் கனகம்மாசத்திரம் போலீஸாரிடம் புகாா் அளித்ததோடு, மகளை மீட்டுத் தருமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனுவும் தாக்கல் செய்திருந்தனா்.

இதனிடையே, அச்சிறுமியை திருவள்ளூா் அனைத்து மகளிா் காவல் நிலைய வளாகத்தில் கடந்த 20ஆம் தேதி விட்டுவிட்டு டில்லி தப்பிச் சென்றாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டில்லியைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், கனகம்மாசத்திரம் போலீஸாா் ஆற்காடு குப்பம் பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனை மேற்கொண்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த டில்லியை மறிந்து விசாரணை நடத்தினா். அப்போது, டில்லி தன் தந்தை ஏழுமலையுடன் சோ்ந்து வீடுகளுக்குள் புகுந்து திருடுவது, நடந்து செல்லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பது, இருசக்கர வாகனம், செல்லிடப்பேசிகளைத் திருடுவது போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, டில்லியிடம் இருந்து நான்கு இருசக்கர வாகனங்கள், ஒன்றரை சவரன் நகை, மூன்று செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அவா் மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா். தலைமறைவாக உள்ள அவரது தந்தை ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com