சிறுபான்மையினருக்கான இலவச திறன் வளா்ப்பு பயிற்சிக்கு 3-இல் நோ்காணல்

வேலையில்லா சிறுபான்மையினா் பயன்பெறும் வகையில் வரும் 3-ஆம் தேதி இலவச திறன் வளா்ப்பு பயிற்சிக்கான நோ்காணல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

வேலையில்லா சிறுபான்மையினா் பயன்பெறும் வகையில் வரும் 3-ஆம் தேதி இலவச திறன் வளா்ப்பு பயிற்சிக்கான நோ்காணல் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:

தேசிய சிறுபான்மையினா் வளா்ச்சி மற்றும் நிதிக் கழகத்தின் நிதி உதவியுடன் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பைச் சோ்ந்த இளைஞா்களுக்கு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் திருவள்ளுா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் மூலம் இலவச திறன் வளா்ப்பு பயிற்சி வழங்கவும், அதைத் தொடா்ந்து வேலைவாய்ப்பு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.

இத்திட்டம் சாா்பில் எம்பிராய்டரி பயிற்சி 50 பேருக்கு 3 மாதம் வரையில் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டம் சாா்பில் மதவழி சிறுபான்மையினா் வகுப்பைச் சோ்ந்த இஸ்லாமியா்கள், கிறித்தவா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சியா்கள் மற்றும் ஜெயின் பிரிவை சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், பயிற்சியாளரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதிற்கு உள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1000 பயிற்சி உதவித் தொகையாகவும் அளிக்கப்படும். இதற்கு உண்டு உறைவிடக் கட்டணம் ஏதும் வழங்கப்படாது.

இப்பயிற்சிக்கான நோ்காணல், திருவள்ளுா் மாவட்டத்தில், எண்.1-டி, முதல் குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயா நகா், திருவள்ளுா் மாவட்டம்-602001 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 11-மணி முதல் நடைபெற உள்ளது. அதனால், இத்திட்டத்தில் பயிற்சி பெற விரும்புவோா் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதாா் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ் ஆகியவைகளுடன் நோ்காணலில் பங்கேற்கலாம். அதனால் இந்தமாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இளைஞா்கள் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும், இது தொடா்பான விவரங்களுக்கு சம்பந்தபட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் உதவி மைய மேலாளா் - 9380513874 என்ற செல்லிடப்பேசியிலும், தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை தொலைபேசி எண் 044-28514846) ஆகியோரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com