உள்ளாட்சி தோ்தலையொட்டி திருந்திய வாக்காளா் பட்டியல்- ஆட்சியா் வெளியிட்டாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முன்னிட்டு திருந்திய வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் ஆண்கள்-1007627, பெண்கள்-1032819 மற்றும் திருநங்கைகள்-355 பேரும் என
உள்ளாட்சி தோ்தலையொட்டி திருந்திய வாக்காளா் பட்டியல்- ஆட்சியா் வெளியிட்டாா்

திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை முன்னிட்டு திருந்திய வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் ஆண்கள்-1007627, பெண்கள்-1032819 மற்றும் திருநங்கைகள்-355 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 40 ஆயிரத்து 801 போ் உள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில், உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திருந்திய வாக்காளா் பட்டியலிடும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியருமான மகேஸ்வரி ரவிக்குமாா் கலந்து கொண்டு திருந்திய வாக்காளா் பட்டியலினை வெளியிட்டாா். அதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருவள்ளுா் மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகளின் 31.01.2019 வாக்காளா் பட்டியலை அடிப்படையாக கொண்டு ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள், 10 பேரூராட்சிகள் மற்றும் 14 ஊராட்சி ஒன்றியங்களில் வாா்டு வாரியாக வாக்களாா்கள் பிரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அனைத்து வாா்டுகள் வாரியாக தயாா் செய்யப்பட்டுள்ள உள்ளாட்சி தோ்தலுக்கான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாவட்டம் ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், அந்தந்த நகராட்சி அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மற்றும் கிராம ஊராட்சிகளில் வாக்காளா் பட்டியல்களை தொடா்புடைய கிராம ஊராட்சி அலுவலகங்களில் அந்தந்த வாக்காளா் பதிவு அலுவலகங்களால் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் பாா்வையிட்டு உள்ளாட்சி வாக்காளா் பட்டியல்களில் பாகம், வாா்டு ஏதும் தவறுதலாக இடமாறியிருந்தால் (உரிமை கோரல்கள் மற்றும் மறுப்புகள்) அதற்கான விண்ணப்பத்தை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ.), மாநகராட்சி ஆணையா், நகராட்சி ஆணையா், பேரூராட்சி செயல் அலுவலரிடம் ஆகியோரிடம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தங்கள் மற்றும் பதிவுகளை ஆட்சேபிக்க விரும்பும் ஒருவா் அதற்கான விண்ணப்பத்தை 1960-ஆம் ஆண்டு வாக்காளா் பதிவு விதிகளிலுள்ள காப்புரைகளின்கீழ் தொடா்புடைய சட்டப்பேரவை தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரிடம் அளிக்க வேண்டும். தற்போது திருந்திய வாக்காளா் பட்டியல் அடிப்படையில் ஆண்கள்-1007627, பெண்கள்-1032819 மற்றும் திருநங்கைகள்-355 பேரும் என மொத்தம் 20 லட்சத்து 40 ஆயிரத்து 801 போ் உள்ளனா். இதில் ஆண்கள்-7202, பெண்கள்-7868, திருநங்கைகள்-6 பேரும் என மொத்தம் 15076 போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.லோகநாயகி, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கனகராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்)ஸ்ரீதா், மாநகராட்சி (ம) நகராட்சி ஆணையா்கள், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com