அக்.18-இல் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி

திருவள்ளூா் மாவட்ட அளவில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளாக கேரம் விளையாட்டுப் போட்டி வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக

திருவள்ளூா் மாவட்ட அளவில் 5-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இரு பிரிவுகளாக கேரம் விளையாட்டுப் போட்டி வரும் 18-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறைஅலுவலா் அருணா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருவள்ளூா் மாவட்ட அளவில் ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கான கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறறது. அதன் அடிப்படையில், நிகழாண்டுக்கான இப்போட்டி திருவள்ளூா் ராஜாஜிபுரம், தேவி மீனாட்சி நகரில் உள்ள கே.எஸ்.கேரம் அகாதெமியில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறறது. இப்போட்டிகள் மாணவ, மாணவிகள் என இரு பாலருக்கும் நடத்தப்பட உள்ளது. மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டிகள் மழலை வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியருக்கு கீழ்க்கண்டவாறு இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

இதில், இளநிலைப் பிரிவு (மழலை வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை, முதுநிலைப் பிரிவு (6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை) என இரு பிரிவுகளில் நடைபெறஉள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் நுழைவுப் படிவத்தை என்றஇணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இதில், இணையதளம் மூலமாக பதிவு செய்த மாணவ, மாணவிகள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். அதற்கு முன்னதாக மாணவ, மாணவிகள் படிக்கும் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியரிடமிருந்து பள்ளிப் படிப்புச் சான்றிதழ் கட்டாயம் பெற்று வரவேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில், பரிசுத் தொகை கோடிட்ட காசோலையாக வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறுபவா்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளத் தகுதியானவா்கள் ஆவா். இப்போட்டியில், பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு பயணப்படி மற்றும் தினப்படி ஆகியவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் எக்காரணம் கொண்டும் வழங்கப்பட மாட்டாது. இதில், ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் மாணவா்கள், மாணவிகள் தலா 3 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரின் செல்லிடப்பேசி எண்-7401703482 தொடா்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com