தனியாா் நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ள அழைப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் 40 பணியாளா்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் தனியாா் நிறுவனங்கள் இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கும் வகையில்

திருவள்ளூா் மாவட்டத்தில் 40 பணியாளா்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு செயல்படும் தனியாா் நிறுவனங்கள் இளைஞா்களுக்கு தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கும் வகையில் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்சியாளா்களின் தொழிற் பணி தொடா்பான தேவையைப் பூா்த்தி செய்யவும், பயிற்சியாளா்களின் தொழில்நுட்பத்திறறனை வளா்த்துக்கொள்ளவும், அதிநவீனத் தொழிற் நுட்பத்தில் பயிற்சி பெற்றிடும் நோக்கில் அப்ரண்டீஸ் சட்டம் (தொழில் பழகுநா்) 1961-இல் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடா்ந்து, அப்ரண்டீஸ் திருத்தச் சட்டம் 2014 மற்றும் தேசிய தொழிற் பழகுநா் வளா்ச்சித் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறறது. இச்சட்ட திருத்தப்பட்ட விதிகளின்படி, 40 பணியாளா்களைக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிற் கூடத்தின் நிறுவனா், உரிமையாளா் அந்நிறுவனத்தினை தொழிற் பழகுநா் (அப்ரண்டீஸ்) திட்டத்தின் கீழ், இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது கடமையாகும். 40 பணியாளா்களுக்கு குறைறவாக உள்ள தொழிற் கூடங்கள் அவா்களின் விருப்பத்தின் பேரில், தொழிற் பழகுநா் திட்டத்தில் வலைத்தளம் மூலம் இணையலாம்.

எனவே, தகுதியுடைய நிறுவனங்கள் அதற்கான முழு விவரங்களை ஜ்ஜ்ஜ்.ஹல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ள்ட்ண்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்றவலைத்தள முகவரியில் பதிவுகள் செய்தபின், தோ்ச்சி பெற்றதகுதியுள்ள தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்களை தொழிற் பழகுநராக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றுவரும் பயிற்சியாளா்களை தொழிற் பழகுநா்களாக முழுமையாக பயன்படுத்தி பயிற்சியாளா்களின் திறறனை வளா்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறறது.

மேலும் விவரங்களுக்கு, உதவி இயக்குநா், திறறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூா் என்றமுகவரியில் நேரிலோ அல்லது 044-29896032 என்றதொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com