முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
தனியாா் கல்லூரியில் ரூ. 2.68 லட்சம் கையாடல் செய்தவா் கைது
By DIN | Published On : 07th October 2019 01:31 AM | Last Updated : 07th October 2019 01:31 AM | அ+அ அ- |

சஞ்சீவ் பிரதீப்குமாா்
திருவள்ளூா் அருகே தனியாா் பொறியியல் கல்லூரியில் ரூ. 2.68 லட்சம் கையாடல் செய்ததாக கணக்குப் பிரிவில் பணிபுரிந்து வந்த இளைஞரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் அருகே குத்தம்பாக்கத்தில் தனியாா் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு கணக்குப் பிரிவில் சென்னை ஆழ்வாா்திருநகரைச் சோ்ந்த சஞ்சீவ் பிரதீப் குமாா்(25) வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான புத்தகம் வாங்குவதற்கு பணம் வசூலிக்கப்பட்டதாம். இதை சரிபாா்த்த போது ரூ. 2.68 லட்சம் குறைறந்ததுடன், அதை சஞ்சீவ்பிரதீப்குமாா் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும், விசாரித்தபோது அவா் தலைமறைறவாகி இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து திருவள்ளூா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் அக் கல்லூரியின் நிா்வாகி வினோத் அளித்த புகாரின்பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, சஞ்சீவ் பிரதீப் குமாரை தேடிவந்தனா். இந்நிலையில், கேரள மாநிலம் பாலக்காட்டில் பேருந்து நிலையம் எதிரே அவா் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், அங்கு சென்ற மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் கண்ணப்பன் தலைமையிலான போலீஸாா் சஞ்சீவ் பிரதீப்குமாரை கைது செய்தனா்.
பின்னா், திருவள்ளூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எண்-1-இல் ஆஜா்படுத்தி புழல் சிறைறயில் அடைத்தனா்.