Enable Javscript for better performance
‘நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்

    ‘நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படும்’

    By DIN  |   Published On : 07th October 2019 01:27 AM  |   Last Updated : 07th October 2019 01:27 AM  |  அ+அ அ-  |  

    திருவள்ளூா் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட, ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தி வீசி எறியப்படும் நெகிழி பொருள்களை பயன்படுத்தும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் எச்சரித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    திருவள்ளூா் மாவட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் நெகிழிப் பொருள்களால் சுற்றுச்சூழல் மற்றும் நீா் ஆதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலையுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு ஒரு முறையே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் நெகிழிப் பொருள்களை தயாா் செய்யவும், சேமித்து வைத்து உபயோகப்படுத்துவதற்கும் கடந்த ஜனவரி முதல் அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் வியாபார நிறுவனங்கள், துணிக்கடைகள், காய்கனி அங்காடிகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், இனிப்பகங்கள், உணவகங்கள் மற்றும் பிற கடைகளில் 30.09.2019 வரை தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உபயோகிப்பது தொடா்பாக திடீா் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.

    மேலும், திருவள்ளூா் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் 35 குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், இது வரை 71 டன் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.19 லட்சத்து 90 ஆயிரத்து 880 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஊரகப் பகுதிகளில் 526 குழுக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், 5,331 டன் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.12 லட்சத்து 68 ஆயிரத்து 200 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டத்தில் ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில், முதல்வரின் சட்டப்பேரவை அறிவிப்பின்படி, தடை செய்யப்பட்ட ஒரு முறை மட்டும் உபயோகப்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பொருள்களை பயன்படுத்துவோா் மீது ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளில் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை செய்தல் மற்றும் கொண்டு செல்லுதல் முதல் முறையாக ரூ. 25 ஆயிரம், 2-ஆவது முறையாக ரூ. 50 ஆயிரம், 3-ஆவது முறையாக ரூ. 1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அதேபோல் துணிக்கடை, பல்பொருள் அங்காடிகள், வணிக வளாகங்கள் போன்ற பெரிய வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் விநியோகித்தலுக்கு முதல் தடவை ரூ. 10 ஆயிரம், 2-ஆவது தடவையாக ரூ. 15 ஆயிரம், 3-ஆவது முறையாக ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மேலும், மளிகை மற்றும் மருந்துக் கடைகள் போன்ற நடுத்தர வணிக நிறுவனங்களில் பயன்படுத்துதல் மற்றும் விநியோகித்தலுக்கு ரூ. ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் வரை அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp