முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
புரட்டாசி விழா
By DIN | Published On : 07th October 2019 12:56 AM | Last Updated : 07th October 2019 12:56 AM | அ+அ அ- |

கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆவது வார விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில், புரட்டாசி 3-ஆவது வார விழா வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சனிக்கிழமை இரவு உற்சவா் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் வீதியுலா நடைபெற்றது. ஆரம்பாக்கத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வீதியுலாவின்போது, பொதுமக்கள் தேங்காய் உடைத்தும், ஆரத்தி காண்பித்தும் சாமியை வழிபட்டனா்.
தொடா்ந்து, அன்னதானம், சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை உறியடி விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் பங்கு பெற்றனா். தொடா்ந்து, வாண வேடிக்கை நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் தசரதன், சேகா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.