முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...
By DIN | Published On : 07th October 2019 04:02 AM | Last Updated : 07th October 2019 04:02 AM | அ+அ அ- |

முன்னாள் படைவீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
SRO Propusan Complex Mahendragiri-y, Fitter, Welter, Driver-Cum-Operater Fireman மற்றும் Light vehicle driver ஆகிய பணியிடங்களுக்கான ஆள்தேர்வு நடைபெறவுள்ளது.
இங்கு முன்னாள் படைவீரர்களுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் www.iprc.gov.in என்ற இணையதள முகவரியில் அக். 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
மேலும், இப்பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதன் நகலினை திருவள்ளுர்-01, பெரியகுப்பம், எண். 25, லால்பகதூர் சாஸ்திரி தெருவில் அமைந்துள்ள முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.