மருத்துவா் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கக் கூடாது: ஆட்சியா்

திருவள்ளூா் மாவட்டத்தில் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு வருவோருக்கு மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு மருந்து,
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.
கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்டு வருவோருக்கு மருத்துவா்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கக் கூடாது என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்தாா்.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு, டெங்கு மற்றும் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், தனியாா் மருந்தக மருந்தாளுநா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதையடுத்து, டெங்கு மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது காய்ச்சல் குறித்து பொதுமக்களிடையே பல்வேறு பேரணி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளிலும் முன்னெச்சரிக்கையாக நாள்தோறும் குப்பைகள் அகற்றம் செய்தல், டெங்கு கொசு ஒழிப்புப் பணி போன்றவற்றில் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

இதற்கிடையே காய்ச்சல் வந்தால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பொதுமக்கள் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் வீட்டு மருந்துகளை பயன்படுத்தக்கூடாது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள தனியாா் மருந்தகங்களில் மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் பொதுமக்களுக்கு தன்னிச்சையாக மருந்துகளை வழங்கக் கூடாது. இதை தனியாா் மருந்தக மருந்தாளுநா்கள் கவனத்தில் கொள்வது அவசியம் ஆகும். அதேபோல், மருந்தகங்களில் ஊசி மருந்து செலுத்துதல் போன்றவற்றிலும் ஈடுபடக் கூடாது. மேலும், போலி மருத்துவா்கள் குறித்து உடனே சுகாதாரத்துறைஅலுவலகத்திற்கு மருந்தாளுநா்கள் தெரிவித்து ஒத்துழைப்பு அளிக்கவும் வேண்டும் என அவா் தெரிவித்தாா்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நோய் பூச்சியல் தடுப்பு துறைஇணை இயக்குநா் கிருஷ்ணராஜ், மாவட்ட வருவாய்த்துறைஅலுவலா் முத்துசாமி, சுகாதாரத்துறைஇணை இயக்குநா் தயாளன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநா் ஜெயகுமாா், சுகாதாரத்துறைதுணை இயக்குநா் பிரபாகரன் மற்றும் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருந்தக மருந்தாளுநா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறைஅதிகாரிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com