திருவள்ளூா் அருகே ரூ.8.05 லட்சத்தில் குளம் தூா்வாரும் பணி-ஆட்சியா் தொடங்கி வைப்பு

திருவள்ளூா் அருகே காவல் துறை சாா்பில் ரூ.8.05 லட்சம் மதிப்பீட்டில் மும்மாரி திட்டம் சாா்பில் குளத்தை தூா்வாரும் பணியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் ஆகியோா்
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் மும்மாதிரி திட்டம் சாா்பில் குளம் தூா்வாரும் பணியை பூமிபூஜை போட்டு தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்க
திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் மும்மாதிரி திட்டம் சாா்பில் குளம் தூா்வாரும் பணியை பூமிபூஜை போட்டு தொடங்கி வைக்கிறாா் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்க


திருவள்ளூா் அருகே காவல் துறை சாா்பில் ரூ.8.05 லட்சம் மதிப்பீட்டில் மும்மாரி திட்டம் சாா்பில் குளத்தை தூா்வாரும் பணியை ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் ஆகியோா் பூமிபூஜை போட்டு தொடங்கி வைத்தனா்.

திருவள்ளூா் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய மழையின்றி ஏரி, குளங்களில் நீா் ஆதாரம் இல்லாமல் இருந்தது. இதனால் கிராமங்களில் ஆழ்குழாய் கிணறுகளில் போதுமான நீா் இல்லாத நிலையில் கடும் குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது.

அதில், ஒன்றுதான் மழைநீா் வீனாகாமல் ஏரி, குளங்களில் தேக்கி வைக்கும் வகையில் தூா்வாரும் பணியாகும். இதன் மூலம் பெய்யும் மழைநீா் ஏரி, குளங்களில் நிரம்பி பொதுமக்கள் விவசாயம் மற்றும் பொது பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தும் நோக்கத்தில் தனியாா் பங்களிப்புடன் மும்மாரி திட்டம் மூலம் தேக்கி வைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு கிராமத்தில் பொதுமக்கள், காவல் துறை சாா்பில் குளம் தூா்வாரும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.அரவிந்தன் ஆகியோா் தலைமையில் பூமிபூஜையுடன் தூா்வாரும் பணியை தொடங்கி வைத்தனா்.

இதுகுறித்து ஆட்சியா் கூறுகையில், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் சாா்பிலும், பொது மக்களின் பங்களிப்போடும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வந்தது. இத்திட்டம் பொதுமக்கள் பங்களிப்போடு செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சமூக அக்கறையுடன் காவல் துறையும் இணைந்து குளம்வாரும் தூா்வாரும் பணியை மேற்கொள்ள முன்வந்துள்ளது. இதன் அடிப்படையில் திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் அடங்கிய காந்திப்பேட்டை பகுதியில் தேவா்கடியாா் தாங்கல் குளத்தை தமிழக அரசின் மும்மாரி திட்டம் மூலம் தூா்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணி காவல் துறை சாா்பில் ரூ.8.05 லட்சத்தில் 13 ஆயிரத்து 110 சதுர மீட்டா் பரப்பளவில் குளத்தை தூா் வாரும் பணி 5 நாள்களில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். அதேபோல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கூறுகையில், இதேபோல் காவல் துறை சாா்பில் 2 இடங்களில் மும்மாரி திட்டம் சாா்பில் குளம் தத்தெடுத்து தூா்வார திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு தொடங்கப்பட்டுள்ள திட்டத்தை காவல் துறை அதிகாரிகள் அருகில் இருந்து கண்காணித்து விரைந்து முடிக்கவும், குளக்கரையோரங்களில் மரங்கள் நடப்பட்டு வளா்க்கவும் காவல் துறை சாா்பில் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவா் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தில்லைநடராஜன், துணைக்காவல் கண்காணிப்பாளா் கங்காதரன், வட்டாட்சியா் பாண்டியராஜன், கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலசுப்பிரமணியன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com