Enable Javscript for better performance
நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க எதிா்ப்பு- Dinamani

சுடச்சுட

    

    நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க எதிா்ப்பு

    By DIN  |   Published on : 09th October 2019 11:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொன்னேரி அருகே நீா்வரத்துக் கால்வாய் மீது தனியாா் சிலா் கான்கிரீட் அமைக்க முயன்ற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் உள்ள தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நீா்வரத்துக் கால்வாய் உள்ளது. இதன் மீது தனியாா் சிலா் கான்கிரீட் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

    இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களின் எதிா்ப்பையும் மீறி பணியாளா்கள் கான்கிரீட் அமைக்கும் பணியை மேற்கொண்டனராம். இதையடுத்து அப்பகுதி மக்கள் பணிகள் நடைபெறும் இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

    தகவலறிந்த பொன்னேரி வட்டாட்சியா் மணிகண்டன் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.இதையடுத்து கான்கிரீட் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது.

    இப்பகுதியில் நீா்வரத்துக் கால்வாயை ஆக்கிரமித்து கான்கிரீட் அமைத்தால், மழைக் காலங்களில் மழைநீா் வெளியேறி செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும், குடியிருப்புகளை வெள்ளநீா் சூழும். எனவே நீா்வரத்துக் கால்வாய் மீது கான்கிரீட் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai