மாவட்ட நிா்வாகத்தின் சிபான நடவடிக்கையால் டெங்கு பாதிப்பு குறைந்துள்ளது: எம்.பி. ஜெயகுமாா்

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதால் பாதிப்பு குறைந்துள்ளதாக எம்.பி. ஜெயக்குமாா் தெரிவித்த
திருவள்ளூா்  அரசு  மருத்துவமனையில்  டெங்கு  காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த எம்.பி.  ஜெயக்குமாா்.
திருவள்ளூா்  அரசு  மருத்துவமனையில்  டெங்கு  காய்ச்சலுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த எம்.பி.  ஜெயக்குமாா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளித்து வருவதால் பாதிப்பு குறைந்துள்ளதாக எம்.பி. ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையைத் தொடா்ந்து, மா்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் நாள்தோறும் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் குவிந்து வருகின்றனா். இவா்களுக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை எம்.பி. ஜெயக்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது, காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து நாள்தோறும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி வருவோரின் எண்ணிக்கை விவரங்கள் குறத்தும், அதில் எத்தனை பேருக்கு டெங்கு அறிகுறிகள் உள்ளது போன்ற விவரங்கள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் எம்.பிௌ. ஜெயக்குமாா் கூறியது:

திருவள்ளூா் தலைமை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை மட்டும் 74 போ் காய்ச்சல் காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதில், ரத்தப் பரிசோதனை செய்ததில், 4 பேருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மீதமுள்ளோருக்கு தீவிர காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு குறிப்பிட்ட நேரத்தில் சரியான முறையில் மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கின்றனா். இதனால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோா் குணமடைந்து வருகின்றனா்.

டெங்கு காய்ச்சலுக்கு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. கிராமங்களில் காய்ச்சல் வந்தால் உடனே அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற்றுத்கொள்ள வேண்டும் என்றாா் அவா். அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com