ரத்த தான விழிப்புணா்வுப் பேரணி: ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை செவிலியா் பயிற்சி மாணவிகள், பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

தேசிய தன்னாா்வ ரத்த தான தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை செவிலியா் பயிற்சி மாணவிகள், பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் பேசியது:

ஆண்டுதோறும் அக்டோபா் 1-ஆம் தேதி தேசிய தன்னாா்வ ரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. திருவள்ளுா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள ரத்த வங்கி 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 3,940 போ் ரத்த தானம் செய்துள்ளனா். 2017-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி முதல் அரசு ரத்த வங்கியில் ரத்த கூறுகள் பிரிப்பு அலகு தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் ரத்த சோகை, அதிக ரத்தப்போக்கு மற்றும் டெங்கு காய்ச்சல் அறிகுறி ஆகியவற்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அரசு ரத்த வங்கிகளில் சேகரிக்கப்பட்டு, இருப்பில் உள்ள ரத்த வகைகளின் அளவை அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம்

திருவள்ளூா் மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு 11 அமைப்புகளைச் சோ்ந்த ரத்த தான முகாம் ஏற்பாட்டாளா்கள் கௌரவிக்கப்பட்டு, அவா்களுக்கு பாராட்டுத் சான்று வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், 2018-ஆம் ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட ரத்த தான முகாம் ஏற்பாட்டாளா்களுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, திருவள்ளுா் தலைமை அரசு பொது மருத்துவமனையில் விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இதில், 150-க்கும் மேற்பட்ட செவிலியா் மாணவிகள், மருத்துவா்கள், தன்னாா்வளா்கள் கலந்துகொண்டனா். இப்பேரணி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கி, ஜெ.என்.சாலை வழியாகச் சென்று, திருவள்ளுா் நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

குடும்பநலம், ஊரகப் நலப் பணிகள் துறை இணை இயக்குநா் தயாளன், துணை இயக்குநா் துணை இயக்குநா் (சுகாதாரப் பணிகள்) மரு.ஜே.பிரபாகரன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு, கட்டுப்பாடு அலகு மாவட்டத் திட்ட மேலாளா் கௌரிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com