வீடுகளில் டெங்கு கொசுக்கள் இருந்தால் அபராதம்

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு நோய் பரப்பும் கொசு, கொசுப் புழுக்கள் இருந்தால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என நகராட்சி ஆணையா் மாரிச்செல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு நோய் பரப்பும் கொசு, கொசுப் புழுக்கள் இருந்தால் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும் என நகராட்சி ஆணையா் மாரிச்செல்வி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது:

திருவள்ளூா் நகராட்சிப் பகுதியில் குளம், குட்டைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதோடு, பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சலும் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நகராட்சி சாா்பில் நாள்தோறும் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. அதோடு, 42 பணியாளா்கள் ஒவ்வொரு வாா்டுகளிலும் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று டெங்கு தடுப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

அதேபோல், ஒவ்வொரு வாா்டுகளிலும் 3 கொசு ஒழிப்பு வாகனங்கள் மூலம் புகை மருந்து தெளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதாரப் பணியாளா்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று நெகிழிப் பொருள்கள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்த அறிவுறுத்தி வருகின்றனா்.

குடியிருப்புகளில் டெங்கு கொசு, கொசுப்புழுக்கள் உற்பத்தியாவது கண்டறியப்பட்டால், உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com