Enable Javscript for better performance
செம்மரக்கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திரத்தில் கைது- Dinamani

சுடச்சுட

    

    செம்மரக்கடத்தல்: தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆந்திரத்தில் கைது

    By DIN  |   Published on : 11th October 2019 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    திருமலையிலிருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த 4 பேரை ஆந்திர போலீஸார் கைது செய்தனர்.
    திருமலையிலிருந்து செம்மரக்கட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு கார் திருப்பதி நோக்கி சென்று கொண்டிருப்பதாக செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸாருக்கு புதன்கிழமை நள்ளிரவில் ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் போலீஸார் மறைவிடத்தில் காத்திருந்தனர். வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு வந்தக் காரை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் 13 செம்மரக்கட்டைகள் இருந்தன. விசாரணையில் அவர்கள் தருமபுரி மாவட்டம் சித்தேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த முருகேசன்(25),  அருணாசலம் (30), கந்தசாமி (27), ஓட்டுநர் பெருமாள் வேலு (35) என்பது தெரிய வந்தது.  இதையடுத்து காரை பறிமுதல் செய்த போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai