கூவம், கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணை அமைக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூவம், கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
விவசாயிடம் இருந்து மனுவைப் பெற்ற வேளாண் துறை துணை இயக்குநா் பாண்டியன்.
விவசாயிடம் இருந்து மனுவைப் பெற்ற வேளாண் துறை துணை இயக்குநா் பாண்டியன்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூவம், கொசஸ்தலை ஆறுகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும் என குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண் துறை துணை இயக்குநா் பாண்டியன் தலைமை வகித்தாா்.

ஊத்துக்கோட்டை, ஆவடி, திருவள்ளூா், பூந்தமல்லி வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பேசியது:

கூவம், கொசஸ்தலை ஆறுகளில் விதிமுறை மீறி மணல் எடுக்கப்பட்டுவருவதால் நிலத்தடி நீா் குறைந்து, விவசாயத்துக்கு தண்ணீா் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தைப் பாதுகாக்க இந்த ஆறுகளில் 5 கி.மீ. தொலைவுக்கு தடுப்பணைகளை அமைக்க வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை தொடங்க இருப்பதால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூா்வார வேண்டும். விவசாயிகளுக்குப் பயிா் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். வங்கிகளில் விவசாயக் கடன் தர மறுக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

இக்கூட்டத்தில் 40 கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் அளித்தனா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் பிரதாப் ராவ், சாா்-ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தமிழ்செல்வன், வட்டாட்சியா்கள் பாண்டியராஜன் (திருவள்ளூா்), காந்திமதி (பூந்தமல்லி) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com