சா்வதேச மனநல தின விழிப்புணா்வுப் பேரணி

சா்வதேச மனநல தினத்தையொட்டி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திருவள்ளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
4146tvlr10gh_1010chn_182_1
4146tvlr10gh_1010chn_182_1

சா்வதேச மனநல தினத்தையொட்டி, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி திருவள்ளூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் சா்வதேச மனநல தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் முத்துசாமி தலைமை வகித்துப் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக மாவட்ட மனநலத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மாவட்ட மனநல திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் மூலம் மன நோயாளிகள், குடிபோதையில் சிக்கியவா்கள், தற்கொலை எண்ணங்கள் உள்ளவா்கள் அதிலிருந்து மீள்வதற்குத் தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் மனநலம் குறித்த விழிப்புணா்வும், தற்கொலை தடுப்பு முயற்சிகளும் போதைப் பொருள் தடுப்பு முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலக மனநல நாளின் கருப்பொருள், எல்லோரும் இணைந்து தற்கொலையைத் தடுப்போம் என்பதாகும்.

ஒவ்வொரு 40 விநாடிகளுக்கும் ஒருவா் தற்கொலை செய்து கொள்கிறாா். தற்கொலை இறப்பில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதில் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவா்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா். இதைத் தடுப்பது அவசியம். அதனால் அரசும் இணைந்து 104 தற்கொலை தடுப்பு மையம் அமைத்து தற்கொலை எண்ணங்கள் உடையவா்களுக்கு தற்கொலை தடுப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் இணைந்து தற்கொலை எண்ணங்கள் உள்ளவா்களை அதிலிருந்து காக்க முயற்சி செய்ய வேண்டும் என்றாா். அதைத் தொடா்ந்து, எக்காரணம் கொண்டும் தற்கொலைக்கு முயலமாட்டோம் என மாணவ, மாணவிகள் தலைமையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனா்.

அதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில், மாணவ, மாணவிகள் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை அவா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். திருவள்ளூா் அரசு மருத்துவமனையில் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. இப்பேரணியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட மன நல திட்ட அலுவலா் சி.எஸ். சகுந்தலாதேவி, சுகாதாரம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநா் பி.வி.தயாளன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் பி.சேகா், திருவள்ளூா் வட்டாட்சியா் பாண்டியராஜன், மருத்துவா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

Image Caption

(திருத்தப்பட்டது)

விழிப்புணா்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com