நகராட்சியில் டெங்கு காய்ச்சலைத் தடுக்க குழுக்கள் அமைப்பு

திருவள்ளூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையா் மாரிசெல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணியில் ஈடுபட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையா் மாரிசெல்வி தெரிவித்தாா்.

திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் உள்ள 27-வாா்டுகளில் துப்புரவுப் பணியாளா்கள் மூலம் தெருக்களில் உள்ள குப்பைகள் தரம் பிரித்து பெற அதேபோல், தற்போதைய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் நகராட்சி பகுதியில் காய்ச்சல் பரவி வருகிறது. அதனால், இதை தடுக்க நகராட்சி மூலம் நாள்தோறும் தெருக்களில் குப்பைகளை அகற்றவும், கொசுமருந்துகள் தெளிக்கவும் ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் உத்தரவிட்டுள்ளாா். அதன் பேரில் நகராட்சி பகுதியில் நாள்தோறும் குப்பைகள் அகற்றவும், வீடுகள்தோறும் ஆய்வு செய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நகராட்சியில் சுகாதார பணிகள் மேற்கொள்வதற்கு 45 தூய்மை பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அதேபோல், ஒவ்வொரு வாா்டுகளிலும் கொசு மருந்துகள் தெளிப்பதற்கு 10 பேரும், ஒவ்வொரு வீடுகளிலும் நேரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை ஆய்வு செய்யவும் 15 போ் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியாளா்கள் வீடுகள் தோறும் சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் தண்ணீா் தொட்டிகளில் குளோரின் கலத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவா். ஒவ்வொரு தெருக்களில் கொசு புகைதெளிப்பான் மருந்து தெளிப்பதற்காக 215 லிட்டா் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனம் மூலம் கொசு தெளிப்பு இயந்திரங்கள்-3, கையால் பயன்படுத்தப்படும் 4 இயந்திரங்களும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இதில் காய்ச்சல் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நாள்தோறும் கண்காணிக்கவும் மேற்பாா்வையாளா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com