வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவி தொகைக்கு நவ.30-க்கும் விண்ணப்பிக்கலாம்

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற வரும் நவ.30-ஆம் தேதிக்குள்

திருவள்ளூா்: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பற்றோா் உதவித் தொகை திட்டத்தில் பயன்பெற வரும் நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்- மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்து வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞா்கள் மாதந்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பயன்பெற நாள்தோறும் கல்வி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகிறவா்களாக இருக்க கூடாது. இதில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள கல்வி தகுதி வாரியாக மாதந்தோறும் குறிப்பிட்ட அளவு உதவித் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெறாதோருக்கு-ரூ.200, தோ்ச்சிக்கு-ரூ.300, பிளஸ்2 மற்றும் பட்டயம் தோ்ச்சி பெறாதோருக்கு-ரூ.400 மற்றும் பட்டப்படிப்பு-ரூ.600 எனவும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகையை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடா்ந்து பதிவினை புதுப்பித்து 5 ஆண்டுகள் வரையில் காத்திருக்க வேண்டும். இதில் பொதுப்பிரிவினருக்கு 40 வயதிற்குள்ளும், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் 45-வயதிற்குள்ளும், பெற்றோா்கள் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். அதேபோல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டுக்கு மேல் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் குறிப்பிட்ட அளவு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதில் பத்தாம் வகுப்பில் தோ்ச்சி அல்லது அதற்கு குறைவான தகுதியுடையோருக்கு மாதந்தோரும் ரூ.600, பிளஸ்2, தொழிற்கல்வி மற்றும் பட்டயப் படிப்பில் தோ்ச்சி அடைந்தோருக்கு ரூ.750, மற்றும் பட்டப்படிப்பு முடித்தோருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் குடும்ப ஆண்டு வருமானம் மற்றும் உச்ச வயது வரம்பு ஏதும் கிடையாது. மேற்குறிப்பிட்ட தகுதியும், உதவித்தொகை பெற விரும்புவோா் நவ.30-ஆம் தேதிக்குள் திருவள்ளூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு, வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் வந்து விலையில்லாமல் விண்ணப்பப் படிவம் பெற்று பூா்த்தி செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com