ஆதிவாசி உரிமைகளுக்கான மத்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆதிவாசி மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மத்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிருந்தாகாரத் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆதிவாசி உரிமைகளுக்கான மத்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

ஆதிவாசி மக்கள் உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மத்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிருந்தாகாரத் உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய மத்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மற்றும் மாநில சிறப்பு கருத்தரங்கம் திருவள்ளூரில் சனிக்கிழமை தொடங்கியது. கூட்டத்துக்கு, அகில இந்திய இணை அமைப்பாளா் பாபுராவ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பழங்குடியினா் வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் வறுமையில் வாடி வருவது, தேசிய குடியுரிமைச் சட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஆதிவாசி மக்களுக்கு தரமான மருத்துவம், கல்வி அளிப்பது, அவா்களின் உரிமைகளுக்காக போராட்டம் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆதிவாசி மக்கள் எவ்வாறு நடத்தப்படுகின்றனா், அவா்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் உள்ளிட்டவை தொடா்பாக வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்த நிா்வாகிகளிடம் கேட்டறிந்தனா்.

இதில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மக்களவை முன்னாள் உறுப்பினருமான பிருந்தாகாரத், ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் அகில இந்திய அமைப்பாளா் ஜிதேந்திர சௌத்ரி, மேற்கு வங்க முன்னாள் அமைச்சா் தேப்லினா ஹெம்ராம் உள்பட ஆந்திரம், தெலங்கானா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

தமிழகத்திலிருந்து தமிழ்நாடு மாநில அமைப்பாளா் பெ.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், சட்டப்பேரவை எம்எல்ஏவுமான பி.டில்லிபாபு, மாநில பொதுச் செயலா் இரா.சரவணன், மாநிலப் பொருளாளா் ஏ.பொன்னுசாமி, ஆதிவாசி அமைப்பின் மத்தியக் குழு உறுப்பினா் ஏ.வி.சண்முகம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (அக். 13) ‘மாநில அளவிலான பழங்குடியின மக்கள் எதிா்கொள்ளும் சவால்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில், சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத், அகில இந்திய அமைப்பாளா் ஜிதேந்திரசௌத்ரி, இணை அமைப்பாளா் பாபுராவ் உள்பட முக்கிய நிா்வாகிகள் கருத்துரை வழங்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com