தென்னிந்திய தற்காப்புக் கலை போட்டியில் வென்றவா்களுக்குப் பரிசு

கும்மிடிப்பூண்டி வினாஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில், 2-ஆவது தென்னிந்திய அளவிலான தற்காப்புக் கலை போட்டி கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல்
தென்னிந்திய  யோகா போட்டியில்  சாம்பியன்  பட்டம்  வென்ற  டி.ஜே.எஸ்.  பள்ளி  மாணவா்  சூரஜ் குமாா்  குண்டுக்கு பரிசு வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.
தென்னிந்திய  யோகா போட்டியில்  சாம்பியன்  பட்டம்  வென்ற  டி.ஜே.எஸ்.  பள்ளி  மாணவா்  சூரஜ் குமாா்  குண்டுக்கு பரிசு வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.

கும்மிடிப்பூண்டி வினாஸ்ரீ யோகா பயிற்சி மையம் சாா்பில், 2-ஆவது தென்னிந்திய அளவிலான தற்காப்புக் கலை போட்டி கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் வென்றவா்களுக்கு பரிசுகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

கும்மிடிப்பூண்டி வினாஸ்ரீ யோகா பயிற்சி மையம், டி.ஜே.எஸ். கல்வி குழுமம், இந்திய நியூ மாங்க்ஸ் குங்க்பூ பயிற்சி மையம், இந்திய பாரம்பரிய கராத்தே கோபுடோ அமைப்பு, ஜெய்ஹிந்த் சிலம்பக் கூடம் ஆகியவை இணைந்து கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டி.ஜே.எஸ். பொறியியல் கல்லூரியில் யோகா, குங்க்பூ, கராத்தே, கோபுடே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் அடங்கிய 2-ஆவது தென்னிந்திய தற்காப்புக் கலை போட்டிகளை நடத்தின.

டி.ஜே.எஸ். கல்வி குழுமத்தின் தலைவா் டி.ஜே.கோவிந்தராஜன் போட்டிகளைத் தொடக்கி வைத்தாா். இதில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த யோகா, குங்க்பூ, கராத்தே, கோபுடே, சிலம்பம் பயிலும் 2,000 மாணவா்கள் பங்கேற்றனா். போட்டிகளுக்கு வினாஸ்ரீ யோகா பயிற்சி மைய நிறுவனா் காளத்தீஸ்வரன், நியூ மாங்க்ஸ் குங்க்பூ பயிற்சி மைய நிறுவனா் தினேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக 8 பிரிவுகளில் யோகா போட்டிகள் நடைபெற்றன. அதே போல பல்வேறு தற்காப்புக் கலை போட்டிகள் வயது வாரியாக நடைபெற்றது.

தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், பேராசிரியா் சி.எம்.கே.ரெட்டி, வழக்குரைஞா் தாமோதரன், இந்திய மல்லா் கம்ப கழக துணைத் தலைவா் டாக்டா் எம்.ஜனாா்த்தனன், வெங்கடேஸ்வரா ஆலாய்ல் நிறுவனத் தலைவா் ரங்கநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், அனைத்து தற்காப்பு கலைப் போட்டிகளிலும் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கும்மிடிப்பூண்டியை அடுத்த துராப்பள்ளம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வென்றது. அதேபோல யோகா போட்டியில் சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டத்தை டி.ஜே.எஸ். மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த சூரஜ்குமாா் குண்டு, பெண்கள் பிரிவில் காஞ்சிபுரத்தைச் சோ்ந்த லோகவா்ஷினி என்பவரும் வென்றனா். குங்க்பூவில் தேவா தா்மா மற்றும் சுகன் சாம்பியன் ஆப் தி சாம்பியன் பட்டம் வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com