முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்
அக். 31-இல் முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 24th October 2019 05:13 AM | Last Updated : 24th October 2019 05:13 AM | அ+அ அ- |

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பயன்பெறும் நோக்கில், குறைதீர் நாள் கூட்டம் வரும் 31-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்கள் பயன்பெறும் நோக்கில், சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்அடிப்படையில், இக்கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலே குறிப்பிட்ட நாளில் காலை 11 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோருக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் பங்கேற்று ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதில் உள்ள பிரச்னைகள் குறித்து முழு விவரங்களுடன் நேரிலோ அல்லது மனுவாகவோ தெரிவிக்கலாம்.
கூட்டத்தில், அளிக்கப்படும் கோரிக்கை மனுக்களைப் பரிசீலனை செய்து, உடனே நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதனால் இம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தவறாமல் பங்கேற்றுப் பயன்பெறலாம்.